வேளாண் பட்ஜெட்: கிருஷ்ணகிரியில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி!ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் !
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய தோட்டக்கலைக்கல்லூரி அமைக்கப்படுவதாக வேளாண்துறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
By : Thangavelu
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய தோட்டக்கலைக்கல்லூரி அமைக்கப்படுவதாக வேளாண்துறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அப்போது, கிருஷ்ணகிரியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தோட்டக்கலைக்கல்லூரி அமைக்கப்படும் என கூறினார். மேலும், நாகப்பட்டினம், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் தொழில் கற்கும் மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 100 ஏக்கரில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Puthiyathalamurai
Image Courtesy:Puthiyathalaimurai
https://www.puthiyathalaimurai.com/newsview/112861/A-new-horticulture-college-will-be-set-up-at-Krishnagiri-at-a-cost-of-Rs-10-crore