Kathir News
Begin typing your search above and press return to search.

ஜல்லிக்கட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு.!

ஜல்லிக்கட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு.!

ஜல்லிக்கட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2021 5:49 PM GMT

தமிழர்களின் பாரம்பரியம் விளையாட்டான ஜல்லிக்கட்டு அன்று எந்த சமூகத்திற்கோ அல்லது காளைக்கோ முதல் மரியாதை வழங்கப்படக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த அன்பரசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார், அந்த மனுவில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்கமிட்டிக்கு தலைமை வகிப்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குழுவின் தலைவராக நீடித்து வருகிறார். கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை, யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையான முடிவு எடுக்கிறார். அதே சமயத்தில் விழாக்குழுவில் பங்கெடுக்க ஆதிதிராவிட சமூகத்தினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

இதே போன்று தொடர்ந்து வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொள்ள முடியாத சூழல் மற்றும் ஆர்வம் இல்லாமல் போய்விடும். எனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் விழாக்குழுவை மாற்றியமைக்க வேண்டும் என கூறியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியிருப்பதால் அவர் கோரும் நிவாரணத்தை தற்போது வழங்க முடியாது என கூறியுள்ளனர்.

அதற்கு மனுதாரர் தரப்பில், அப்படி நடக்கும் பட்சத்தில் கடந்த ஆண்டுபோல காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதல் மரியாதை வழங்குவது மற்றும் ப்ளக்ஸ் பேனர்களை வைப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு கணக்கு வழக்குகளை பராமரிப்பதற்காக தனி வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும். இதனை உத்தரவாகப் பிறப்பிக்க வேண்டும், என கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பொறுத்தவரை கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பொருந்தும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News