தேசிய தலைமை வழிகாட்டுதலில் தமிழக பாஜக செயல்படும்! வானதி சீனிவாசன் தெரிவித்த இறுதி முடிவு!

By : Sushmitha
கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி வெளியானது உடன் அதிமுக பாஜகவின் கூட்டணி முறிதல் என்பது வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது பற்றி பாதயாத்திரையில் இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட பொழுதும் தேசிய தலைமை இது குறித்து முடிவு செய்து அறிவிப்பார்கள் எனவே அதற்காக காத்திருங்கள் என்று ஒரே வரியில் பதிலளித்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மகளிர் தேசிய தலைவர் வானதி சீனிவாசன், ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே இருக்கக்கூடிய கட்சிகள் பாஜக உடனான கூட்டணியை பொறுத்து கருத்து சொல்லும் விஷயத்தில் எங்களுடைய தலைவர்கள் தொடர்ச்சியாக அவர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள், மேலும் ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனியான ஒரு செயல் திட்டம் இருக்கிறது, தனியான சித்தாந்தம் இருக்கிறது, அவர்களுக்கு என்று அவர்கள் போற்றும் தலைவர்கள் இருக்கிறார்கள்! இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து ஒருவருக்கொருவர் உடனான பரஸ்பரம் தான் கூட்டணி, கூட்டணி என்பது தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது மட்டுமே அதனால் இப்போதைக்கு எங்கள் தேசிய தலைமை எங்களுக்கு வழிகாட்டுதல் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் இது பற்றி எங்கள் மாநில தலைவர் கூறியதில் உள்ள நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.
Source - News 360°
