Kathir News
Begin typing your search above and press return to search.

சனாதனத்திற்கு எதிரான பிரச்சாரம் குறித்து ஆளுநர் ஆர். என். ரவி பெற்ற புகார்!

சனாதனத்திற்கு எதிரான பிரச்சாரம் குறித்து ஆளுநர் ஆர். என். ரவி பெற்ற புகார்!
X

SushmithaBy : Sushmitha

  |  28 Sept 2023 6:52 AM IST

சனாதனத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுவதாக தமிழக ஆளுநரிடம் இன்று விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இடதுசாரி அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக விளையாட்டு துறை அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அம்மாநாட்டில் அமைச்சர் பேசிய கருத்துக்கள் இன்றளவும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்து சனாதனத்திற்கு எதிராக தெரிவித்த கருத்துக்களால் அவர் சந்தித்த விமர்சனங்களும் கண்டனங்களும் ஏராளம். இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரசியலமைப்பின் சட்டப்படி அமைச்சராக உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழகத்தில் பிரச்சாரம் நடத்துவதை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளனர்.

Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News