Kathir News
Begin typing your search above and press return to search.

வெளியான அறிவிப்பு! பாஜக நிர்வாகிகள் கூட்டம்!

வெளியான அறிவிப்பு! பாஜக நிர்வாகிகள் கூட்டம்!
X

SushmithaBy : Sushmitha

  |  29 Sept 2023 6:02 AM IST

அக்டோபர் மூன்றாம் தேதி பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்று அறிவிப்பு வெளியானது.

இதனை அடுத்து கூட்டணி விலகல் பற்றி பாஜக தரப்பில் மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் வினவிய பொழுதும் தேசிய தலைமை என்ன கூறுகிறதோ அதையே இங்கு செயல்படுத்துவோம் கூட்டணி குறித்து அவர்களே முடிவெடுத்து அறிவிப்பார்கள் அப்பொழுது நான் பேசுகிறேன் என்று பதிலளித்தார்.

இந்த கூட்டணி முறிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டது. இருப்பினும் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக பாஜக இடையில் இருந்த வாக்குவாதங்களும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தான் காரணம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி முடிவு செய்வதற்காக அக்டோபர் மூன்றாம் தேதி சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதற்கு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை ஏற்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News