ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்வு.. ஆளுநர் பங்கேற்பு..
By : Bharathi Latha
ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் பங்கேற்பு. நேற்று நந்தனார் குருபூஜை தினத்தை தொடர்ந்து நந்தனார் பிறந்த ஊரான சிதம்பரம் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் ஆதனூரில் விழா ஓன்று நடைபெற்றது. இந்த விழாவில் 100 பறையர்களுக்கு பூணுல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே இன்று நந்தனார் குருபூஜை விழா நடந்தது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்ற நிலையில் 100 தலித்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இந்த விழாவில் 100 ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆளுநர் ஆர்.என் ரவி முன்னிலையில் 100 ஆதிதிராவிடர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். மேளதாளங்கள், மந்திரங்கள் முழங்க ஆதிதிராவிடர்கள் பூணூல் அணிந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தர்மத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஒரு நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். அது மட்டும் கிடையாது தமிழகத்தில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சியில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது.
Input & Image courtesy: News