வலுக்கட்டாயமாக தமிழக அரசு கோவில்களை வைத்திருக்கிறது! கொந்தளித்த பொண்மானிக்கவேல் ... அண்ணாமலை திட்டவட்டம்!
By : Sushmitha
சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் கோயில்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து அதன் சொத்துக்களை முடக்குவதாகவும் வருமானத்தை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கு தமிழக முதல்வர் தரப்பிலிருந்து எதிர்ப்பும் கண்டனமும் பிரதமர் நரேந்திர மோடி மீது தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவில் சொத்துக்களை தமிழகத்தில் மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது என்று பிரதமர் மோடி பேசியது அனைத்தும் உண்மையே! இதனை தவறு என்று நிரூபிக்க முதல்வர் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளாரா? மிகவும் கௌரவமாக மரியாதையாக பேசுவோம் பதில் சொல்லட்டும் அப்படி அவர்கள் பதில் தெரிவித்தால் நான் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறி விடுகிறேன் மாநிலத்தை விட்டு வெளியேறவும் தயாராக உள்ளேன். கிட்டத்தட்ட 1128 வருடத்திற்கு முன்பாக கட்டப்பட்ட ஒரு கோவிலுக்கு செலவழிக்காமல் உள்ளார். நூற்றுக்கு நூறு விழுக்காடு அல்ல 100க்கு இரண்டு லட்சத்து 80 ஆயிரம் மடங்கு உண்மை! வலுக்கட்டாயமாக தமிழக அரசு இந்து கோவில்களை கையில் வைத்திருக்கிறது என்று ஆதங்கமாக பத்திரிகையாளர்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த குற்றச்சாட்டு உண்மை என என கூறினார் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல்.
மேலும், தமிழக அரசின் பிடியில் இருக்கும் கோவில்களை மீட்கும் வரை ஓயமாட்டேன் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Source - Dinamalar & News Tamil 24×7