தனி தீர்மானம் முழுமையாக இல்லை என வெளிநடப்பு செய்த பாஜக! தனி தீர்மானத்தை நிறைவேற்றிய பேரவை தலைவர்!
By : Sushmitha
இன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு க ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை முன் வைத்தார்.
அதாவது காவிரி நீரை திறக்க கர்நாடக அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்று குறிப்பிட்டார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு பாஜக தரப்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களை முழுமையாக கேட்காமல் பேரவை தலைவர் அப்பாவு குறுக்கிட்டு அவர்களது மைக்கை அனைத்துள்ளார். மேலும் தீர்மான முழுமையாக இல்லாததை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால் தமிழக முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் இது குறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மத்திய அரசு, மாநில அரசின் உரிமைகளில் தலையிட வேண்டாம் என்று கூறிவிட்டு! தற்போது கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற வேண்டும் என்பதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தெரிவித்து திமுக இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தங்களின் இயலாமையை மறைக்கவே இது போன்ற தீர்மானத்தை காவிரி விவகாரத்தில் கொண்டு வந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Source - Dinamani & Dinamalar