சென்னி மலையின் பெயரை மாற்ற முடிவு செய்த கிறிஸ்தவ அமைப்பினர்! ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது இந்து முன்னணி அமைப்பு!
By : Sushmitha
ஈரோடு மாவட்டம் சென்னிமலை கத்தகொடிக்காடு என்ற இடம் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. இந்த பகுதியில் அர்ஜுனன் எனப்படும் ஜான் பீட்டர் வீட்டில் மதமாற்றம் செய்யும் நோக்கில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் அனுமதி இன்றி ஞாயிறுதோறும் ஜெபக்கூட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது. மேலும் இந்து தெய்வங்கள் குறித்து இழிவாகவும் பேசியுள்ளனர் இதனால் அப்பகுதியில் உள்ள இந்துக்கள் ஆச்சரியமடைந்ததோடு கூட்டம் நடத்தப்படுவதால் தொந்தரவுகளை சந்தித்துள்ளனர்.
இதனால் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் இந்து முன்னணி அமைப்பினர் ஜெபக்கூட்டம் நடந்த பகுதிக்கு சென்று அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் இது போன்ற கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று தெரிவித்ததற்கு ஜான் பீட்டர் என்பவர் சின்னசாமி மற்றும் அவரது மகன் கோகுல் மற்றும் சிலர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் போலீசாரிடம் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கை தொடர்ந்து போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். அதற்குப் பிறகு செப்டம்பர் 26 ஆம் தேதி கிறிஸ்தவ முன்னணி அமைப்பினர் சார்பில் சென்னிமலை பஸ் ஸ்டாப் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்று உள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தில் முருகன் குடியிருக்கும் சென்னி மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று கூறியுள்ளனர்.
இப்படி மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கிறிஸ்தவ முன்னணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் சென்னிமலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூட போலீசாரால் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முருகன் கோவில் மலையான சென்னி மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று தெரிவித்ததற்காக கிறிஸ்தவ முன்னணியினர் கைது செய்ய வேண்டும் என்று வருகின்ற 13ஆம் தேதி சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Source - Dinamalar