பணி நிரந்தரம் செய்ய வேண்டும் நர்சுகளின் திடீர் போராட்டம்.. வாக்குறுதி என்னானது..
By : Bharathi Latha
சென்னை மாநகரில் பணி நிரந்தரம் செய்யக்கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக சென்னை மாநகரங்களில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த போராட்டத்தின் பொழுது செல்லு நர்சுகள் மயக்கம் போட்டு கீழே விழுந்துதன் காரணமாகவும் பரபரப்பு ஏற்பட்டது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல திமுக அரசு நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர பணியிடங்களை உருவாக்கிட வேண்டும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுணர்வு பல்வேறு கட்டங்களாக போராட்டங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் இவர்கள் போராட்டம் நடத்தும் பொழுது அவப்பொழுதும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுவது உண்டு. ஆனால் அதற்கு அப்புறம் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் பலரும் மனக்கவலையை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். போராட்டம் எதிரொலி காரணமாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தின் அனைத்து நுழைவாயில்கள் பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
போராட்டம் நடத்துவதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றும் நர்சுகள் அதிகாலையில் இருந்தே வர தொடங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சிலர் மயக்கம் போட்டு கீழே விழ வேண்டிய ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டு இருந்தது.
Input & Image courtesy: News