அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வேண்டும்! ஆர்பாட்டத்தை அறிவித்தது பாஜக!
By : Sushmitha
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக தனது வாக்குறுதியில் தமிழக குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன் பிறகு ஆட்சி அமைத்த திமுக இரண்டு வருடங்களாக இந்த திட்டம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது அதற்குப் பிறகு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான மகளிர் உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கில் போடப்படும் என்று தெரிவித்தது.
ஆனால் இதில் சில தகுதிகளை நிர்ணயித்து அறிவித்தது இதனால் குடும்ப தலைவிகள் மத்தியில் அதிருப்தி நிலவியது. மேலும் இந்த திட்டத்தில் வரையறை செய்யப்பட்ட தகுதியின் அடிப்படையில் ஒரு கோடி 63 லட்ச விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது, ஆனால் 1கோடியே 5 லட்சத்து ஐம்பதாயிரம் குடும்பத்தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 56.5 லட்ச விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, நிராகரிப்பிற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக புதிய இணையதளத்தையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. சமீபத்தில் அவற்றை தெரிந்து கொள்வதற்காக மகளிர் மேற்கொண்டபொழுதும் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு முடக்கமானதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 18ஆம் தேதி முதல் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Source - junior Vikatan