தி.மு.க பின் வாங்கியது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி.. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை..
By : Bharathi Latha
தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் நார்கள் மற்றும் அதனுடைய மற்ற பயன்பாட்டு பொருட்களான தென்னை நார் தொழிலை திமுக அரசு முற்றிலுமாக ஒதுக்கியது. குறிப்பாக வெள்ளை பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தென்னை நார் தொழில் திமுக அரசு ஆட்சி ஏற்ற பிறகு ஆரஞ்சு பட்டியலில் வைக்கப்பட்டது. இதன் காரணமாக தென்னை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனுடைய தொழிலாளர்கள் மிகவும் கஷ்டத்தில இருந்து வருகிறார்கள். தென்னை நார் தொழிலையே முடக்கிய தி.மு.க.
தற்போது, தன் நிலைப்பாட்டில் பின்வாங்கியிருப்பது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். குறிப்பாக திமுக அரசு தன்னுடைய முடிவு மாற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இதுபற்றி கூறும் பொழுது, வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை தி.மு.க அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி அரசாணை வெளியிட்டு ஆரஞ்சு வகை பிரிவிற்கு மாற்றுவது அத்தோடு மட்டுமல்லாமல், தென்னை நார் தொழிலுக்கு கொடுக்கப்பட்ட முக்கியமான சிறப்பு அம்சங்களும் மறுக்கப்பட்டது. உற்பத்தியாளர் தொழிலாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தி.மு.க.,வின் மக்கள் விரோத செயல்பாட்டை இதற்கு தமிழக பாஜக சார்பில் வெளியிட்ட அறிக்கையில் இது பற்றி குறிப்பிட்டு இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கிறார். மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது போல் நடித்த தி.மு.க., அரசு, தற்போது, தென்னை நார் தொழிலை, மீண்டும் வெள்ளை வகைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்படி ஒரு ஒரு தொழிலையே பின்னடைவு ஏற்படுத்தி இருப்பது திமுக ஆட்சியில் தான் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News