கிரானைட் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு.. பெண்கள் ஒன்று கூடி போராட்டம்..
By : Bharathi Latha
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஐயர் பட்டி ஊராட்சிகளில் ஒன்றியத்திற்கு 200கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இந்த பகுதிகளில் கல் பாறைகளால் உருவான பெரிய பரப்பளவு உள்ள மலைகள் இருக்கின்றன. இந்த பகுதிகளில் கால்வாய் பாசன வசதி இல்லாத ஒரு பகுதியாகும். இதனால் மழைக்காலங்களில் இந்த பெரிய மலைகளில் உருவாகி பெருக்கெடுத்து வரும் மழை நீரை கண்மாய்க் குளங்கள் ஆகியவற்றில் சேமித்து வைத்து இப்பகுதி மக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ள இந்த பகுதியில் மலைகளில் உருவாக்கும் நீரை நம்பி தான் விவசாயத்தை செய்கிறார்கள்.
இந்நிலையில் இந்த பகுதியில் 3 மலைகளில் 20 ஆண்டுகளுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுக்க மாவட்டம் சார்பில் டெண்டர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். குறிப்பாக இந்த மலைகளில் கிரானைட் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் அவர்களிடமும் மனு அழைத்து இருக்கிறார்கள். கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தார்கள்.
அதன்படி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பெண்கள் இருவருக்கும் மேற்பட்ட கிராமங்களில் சேர்ந்த முன்னுருக்கும் மேற்பட்ட பெண்கள் பெரிய பந்தலில் கை குழந்தைகள் உடன் வந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக இங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் இயங்க தமிழக அரசு 2014 ஆம் ஆண்டு தடைப் விதித்தது. இருந்தும் இப்பகுதியில் உள்ள மூன்று மலைகளில் கிரானைட் குவாரிகள் செயல்பட அனுமதிக்க கூடாது என்று கூறி வருகிறார்கள்.
Input & Image courtesy: News