அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டைகள் விற்பனையா.. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா..
By : Bharathi Latha
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சத்துணவு வழங்கும் திட்டத்தின் மூலமாக சுமார் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டையுடன் கூடிய சத்தான உணவு வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்து இருக்கிறது. அந்த வகையில் முறைகேடுகளை தவிர்க்க முட்டைகளை அடையாளம் வைத்து வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
குறிப்பாக முட்டையில் ஒரு சீல் பதிக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால் பகுதியில் நேற்று மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டதாகவும், சாதாரணமாக 30 அட்டை கொண்ட ஒரு அட்டை 170 வரை விருப்பப்படுகிறது. ஆனால் காரைக்காலில் ஒரு அட்டை சத்துணவு முட்டை 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடைகளில் ஒரு முட்டை ஆறு ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் 100 ரூபாய்க்கு 30 முட்டை என்றால் சும்மாவா விடுவார்களா பல பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்று இருக்கிறார்கள்.
தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு இலவச முட்டைகளை கடத்தி சென்று காரைக்கால் பகுதிக்கு கொண்டு வந்து தற்போது மலிவு விலைக்கு விற்று வருகிறார்கள். இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News