Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் வீடு கட்டுபவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!

சென்னையில் வீடு கட்டுபவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!
X

SushmithaBy : Sushmitha

  |  3 Nov 2023 3:09 AM GMT

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று முன்தினம் ரிப்பன் கட்டத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது அதில் மிக முக்கிய தீர்மானமாக சென்னையில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் என்பது 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள தீர்மானம் வருகின்ற நவம்பர் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் கல்வி நிறுவனங்கள் வணிகம் தொழிற்சாலை மற்றும் வீடு ஆகியவற்றின் தளப்பரப்பு குறியீட்டில் மேல் கட்டிட பரப்பானது 100 சதுர மீட்டருக்கு மேல் இருந்தால் கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணம் என்பது முன்பிருந்த கட்டணத்தை விட 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களுக்கு ரூபாய் 90, ரூ.155, ரூ. 410, மற்றும் ரூ.1050 என 10 சதுர மீட்டருக்கு இருந்த கட்டணத் தொகை தற்பொழுது இரண்டு மடங்காக இரட்டிபடைந்து ரூபாய் 180, ரூ. 310, ரூ. 820 மற்றும் ரூ. 2,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று குறிப்பிட்ட சதுர மீட்டர் அளவில் வணிகம் மற்றும் தொழிற்சாலைகளின் கட்டிடங்களின் கட்டணமும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி குடிநீர் தொட்டி, கிணறு போன்றவற்றை கட்டுவதற்கான கட்டணமும் சுற்றுச்சுவர்களுக்கான கட்டணம் மற்றும் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது இவை அனைத்துமே வருகின்ற 10ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Source : The Hindu Tamilthisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News