தமிழக கல்லூரி மாணவர்களிடையே அதிகரிக்கிறதா போதை பழக்கம்..
By : Bharathi Latha
தமிழக கல்லூரி மாணவர்களுடைய தற்போது போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாக கருத்து வருவதாக முக்கிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்து இருக்கிறது. கல்லுாரி மாணவர்களிடையே, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருவதே, அவர்களுக்குள் மோதல் அதிகரிக்கவும், ராகிங் நடக்கவும் காரணமாகவுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக, அதிக பொறியியல், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளைக் கொண்ட உயர் கல்வி மாவட்டமாக கோவை உள்ளது. தனியார் கல்லுாரிகளில், வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர், தனியார் விடுதிகளிலும் அல்லது கல்லூரி விடுதிகளிலும் தங்கி கல்லூரி படிப்பை மேற் கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக, இந்த மாணவர்களைக் குறி வைத்து, போதை வர்த்தகம் அபரிமிதமாக நடந்து வருகிறது. நாளுக்கு நாள் மாணவர்கள் அதிக அளவில் போதைப் பொருளை எடுத்துக் கொள்வதாகவும் தற்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Input & Image courtesy: News