ஸ்மார்ட் சிட்டி தரவரிசை பட்டியல்.. இடம் பிடித்த தமிழகத்தின் முதல் மாவட்டம்.. எது தெரியுமா..
By : Bharathi Latha
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் புதுமையான மேம்பட்ட அம்சங்களுக்கும் மத்திய அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. திட்டங்கள் நிறைவு மற்றும் நிதி பயன்பாடு அடிப்படையில், ஸ்மார்ட் சிட்டி தர வரிசை பட்டியலில் குஜராத்தில் சூரத் நகரம் முதலிடத்தில் உள்ளது. இந்த ஒரு தரவரிசை பட்டியில் முதல் 10 இடங்களில் தமிழகத்தில் ஒரே ஒரு மாவட்டம் இடம் பிடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் மதுரை நகரம் 8 வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில் வேறு எந்த தமிழக நகரங்களும் இடம் பிடிக்கவில்லை.vஇந்தியாவின் 100 நகரங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இதில் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
கு.றிப்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் நிலவரத்தின்படி 1.70 லட்சம் கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இருப்பதாகவும், குறிப்பாக 1, 745 பணிகள் மீண்டும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு தரவரிசை பட்டியலில் மதுரை எட்டாம் இடத்தில் இருக்கிறது. குஜராத்தின் சூரத் முதலிடம் பிடித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News