அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடை பயணம்.. வீடு வீடாக வந்து பத்திரிகை வைத்த பா.ஜ.கவினர்..
By : Bharathi Latha
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் என் மண் என் மக்கள் என்று யாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழக அரசியலில் என் மண் என் மக்கள் என்ற யாத்திரை பயணம் மக்கள் மத்தியில் மிகவும் ஆழமான ஒரு கருத்தை பெற்று இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அண்ணாமலை தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். மக்களிடம் இதுவரை அதிக அளவில் இருந்து வரவேற்புகள் குவிந்து வருகிறது. அது மட்டும் கிடையாது மக்களிடம் எது பற்றிய குறைகள் இருக்கிறதோ?அதை மக்கள் புகார் பெட்டியில் தெரிவிப்பதற்கான ஒரு சூழ்நிலையும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக மூன்றாம் கட்ட நடை பயணம் வரை பல்வேறு மனுக்கள் அண்ணாமலை அவர்களிடம் மக்கள் சார்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றுக்கு உரிய நடவடிக்கை பாஜக தரப்பிலிருந்து எடுக்கப்படும் என்று வாக்குறுதியும் அளிக்கப் பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வருகிற 26-ந்தேதி திருவையாறில் தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.
பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடைபயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. தஞ்சாவூரில் நடைப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்நிலையில் அண்ணாமலை நடைபயணத்தை முன்னிட்டு தஞ்சை மேற்கு மாநகரப் பகுதி நிர்மலா நகரில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் பத்திரிக்கை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தொடங்கி வைத்தார்.
Input & Image courtesy: News