Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த பட்டியல் என்ன - அண்ணாமலை வெளியிட்ட ஷாக் தகவல்?

அடுத்த பட்டியல் என்ன - அண்ணாமலை வெளியிட்ட ஷாக் தகவல்?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2022 7:22 AM IST

தி.மு.கவின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருச்சியில் பேசிய அவர், சொத்து வரி, மின்சாரம், பால் என அனைத்தையும் விலை உயர்த்தியது தி.மு.க. மத்திய அரசு சொல்லித் தான் விலை உயர்வு செய்ததாக, பொய்யையும் சொல்கின்றனர். மத்திய அரசு மீது பழி போடுவது மட்டுமே மாநில அரசின் வாடிக்கையாக உள்ளது.

தினமும் விலை உயர்த்துவது பற்றி முதல்வர் யோசித்துக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஆட்சி செய்யத் தெரியாத, மனசாட்சி இல்லாத மாநில அரசின் கையில் மாட்டிக் கொண்டுள்ளோம்.

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி விவகாரத்தில் தி.மு.கவின் மெத்தனமும், போலீசாரின் செயல் இன்மையும் தான் அந்த சம்பவத்திற்கு காரணம்.

நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் என்பதால், போலி பாஸ்போர்ட் ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை, கவர்னரிடம் கொடுத்துள்ளோம்.

என்.ஐ.ஏ.சோதனை மூலம், குற்றச் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர்களை சொந்த ஊருக்குள் அனுமதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழந்து விடும் என தெரிவித்தார்.

Input From: dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News