Kathir News
Begin typing your search above and press return to search.

கன்னியாகுமரி துணை ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: தலைமறைவான தீவிரவாதியை வளைத்துப் பிடித்த NIA!

கன்னியாகுமரி துணை ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: தலைமறைவான தீவிரவாதியை வளைத்துப் பிடித்த NIA!

கன்னியாகுமரி துணை ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: தலைமறைவான தீவிரவாதியை வளைத்துப் பிடித்த NIA!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Jan 2021 8:20 PM GMT

கன்னியாகுமரியில் தன் கடமையை செய்து கொண்டிருந்த காவல்துறை துணை ஆய்வாளர் வில்சனின் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியான ஷிஹாபுதீன் என்ற ஷிராஜுதீன் என்ற காலித் என்ற 39 வயது சென்னையை சேர்ந்த ஜிகாதி தீவிரவாதியை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) கைது செய்துள்ளது.

கத்தார் நாட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த பொழுது இந்த கைது நிகழ்ந்துள்ளது என தேசிய புலனாய்வு நிறுவனம் டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளது.

சிறப்பு துணை ஆய்வாளர் வில்சனின் கொடூரமான கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 6 ISIS பயங்கரவாதிகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. வில்சன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என அப்துல் ஷமீம், ஒய் தோவ்ஃபீக், காஜா மொஹிதீன், மஹ்பூப் பாஷா, எஜாஸ் பாஷா மற்றும் ஜாஃபர் அலி ஆகியோர் மீது 120 பி, 302, 353 மற்றும் 506 (ii) IPC, யுஏ (பி) சட்டம், 1967, பிரிவு 16, 18, 18 பி, 20, 23, 38 மற்றும் 39, மற்றும் ஆயுதச் சட்டத்தின் 25 (1 பி) (அ) மற்றும் 27 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

SSI வில்சனின் கொலை தொடர்பான முதற்கட்ட விசாரணையில், அவரது கொலைகாரர்கள் "சுயமாக-அறிவிக்கப்பட்ட ஜிஹாதிகள்" என்பது தெரியவந்தது, அவர்கள் தங்கள் ISIS கூட்டாளிகளான முகமது ஹனீப் கான் (29), இம்ரான் கான் (32) மற்றும் முகமது ஜைத் (24) ஆகியோர் ஜனவரி 2020ல் பெங்களூரில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டதிற்கு பழிவாங்குவதற்காக வில்சனைக் கொன்றனர்.

பெங்களூரில் தங்கள் ISIS சகாக்கள் கைது செய்யப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, மறுநாள் இரவு 9:30 மணியளவில் தமிழ்நாட்டின் காளியக்கவிலையில் உள்ள பதந்தலமூடு சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் வில்சனை சுட்டுக் கொன்றனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த குற்றவாளிகள், தவுபீக் மற்றும் அப்துல் ஷமீம் ஆகியோர் CCTV காட்சிகள் மூலம் போலீசாரால் அடையாளம் காணப்பட்டனர். இதில் ஷமீம், 2014 ஆம் ஆண்டில் இந்து முன்னானி தலைவரின் கொலை வழக்கில் ஜாமீன் வாங்கிய பின்னர் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் 2020 ஜனவரி 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்களது சகாக்கள் கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்குவதற்காகவும், மக்களின் மனதில் பயத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது 2020 பிப்ரவரி 1 ஆம் தேதி NIA மீண்டும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை தமிழக போலீசாரிடம் இருந்து எடுத்துக் கொண்டது. NIA நடத்திய விசாரணையில் பரந்த விரிந்த சதியில் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களின் பங்கும் தெரியவந்தது.

Accused in SSI Wilson murder case

விசாரணையின்படி, காஜா மொஹிதீன் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ISIS உறுப்பினராக இருப்பது கண்டறியப்பட்டது. மே 2019 முதல், அவர் ஜிஹாதி சித்தாந்தத்தின் மீது அப்துல் ஷமீம் மற்றும் தோவ்ஃபீக்கை தீவிரப்படுத்தினார் மற்றும் அரசிற்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அவர்களை வழி நடத்தினார்.

பின்னர் 2019 அக்டோபரில், காஜா மொஹிதீன் மஹபூப் பாஷா, எஜாஸ் பாஷா மற்றும் ஜாஃபர் அலி ஆகியோருக்கு சட்டவிரோத துப்பாக்கிகளைப் பெறும் படிக் கூறினார். அரசாங்கத்திற்கும் காவல்துறையினருக்கும் எதிராக தாக்குதல்களை நடத்துவதற்கு தடைசெய்யப்பட்ட தோட்டாக்களையும் பெற்றார். 2019 டிசம்பரில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பதுங்கி இருந்த தோவ்ஃபீக் மற்றும் ஷமீம் ஆகியோருக்கு சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வழங்கப்பட்டன.

இருப்பினும், ஜனவரியில், மஹபூப் பாஷாவின் கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்து, ஜாஃபர் அலி, ஈஜாஸ் பாஷா மற்றும் பிறரைப் பின்தொடரத் தொடங்கியபோது, கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநில எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் தமிழக காவல்துறையைத் தாக்குமாறு மொஹிதீன் தோஃபீக் மற்றும் ஷமீம் ஆகியோருக்கு உத்தரவிட்டான் என தெரிய வந்தது.

இப்படுகொலை மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News