Begin typing your search above and press return to search.
N.I.A சிவகங்கையில் அதிரடி சோதனை ! ஒரே பரபரப்பு !

By :
காளிதாஸ் என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் . 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்ற இவர் அங்கு இயங்கிய மாவோயிஸ்ட் அமைப்புடன் பழக்கம் ஏற்பட அவர்களது இயக்கத்தில் காளிதாஸ் இணைந்துகொண்டார்.
தேசிய புலனாய்வு முகமை பிரிவு காளிதாசை கைது செய்தது . அவர் இப்போது கேரளாவில் சிறையில் உள்ளார்.காளிதாஸிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தியது . இதில் கிடைத்த தகவல்களின் படி அவரது உறவினர் வீடுகளில் சோதனை நடத்த திட்டமிட்டனர்.
சகாளிதாசின் சகோதரர் சிங்காரம் சிவகங்கையில் வசிப்பது தெரியவந்தது. அவரது வீட்டில் என்.ஐ.ஏ. இன்று காலை அதிரடியாக சோதனையில் இறங்கினர். சிவகங்கை போலீசார் உதவியுடன் சிங்காரம் வீட்டில் சோதனை நடத்தி வருகிறது.
என்.ஐ.ஏ. சிவகங்கையில் சோதனை நடத்தி வருவது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Image : India Today
Next Story