கொரோனா நெகட்டிவ், இ பாஸ் கட்டாயம்.. நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தவு.!
வேறு மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வருவதற்கு கொரோனா நெகட்டிவ் சான்று மற்றும் இ பாஸ் கட்டாயம் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

By : Thangavelu
வேறு மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வருவதற்கு கொரோனா நெகட்டிவ் சான்று மற்றும் இ பாஸ் கட்டாயம் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மக்களின் நலன் கருதி சில மாவட்டங்களில் சுற்றுலாத் தலங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அதே போன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள், படகு இல்லம் போன்றவை திறக்கவில்லை.
இந்நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும், வெளியூர் பயணிகளும் கட்டாயமாக இ பாஸ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.