நீலகிரி: மனிதர்களை கொல்லும் புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு! வனவிலங்கு ஆர்வலர்கள் எங்கே!
மசினகுடி மற்றும் கூடலூர் பகுதிகளில் இதுவரை 4 பேரை கொன்ற புலியை சுட்டுக்கொல்ல அதிரடிப்படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும், இதில் 5 குழுக்களாக பிரிந்து புலியை சுடுவதற்கு திட்டம்மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By : Thangavelu
மசினகுடி மற்றும் கூடலூர் பகுதிகளில் இதுவரை 4 பேரை கொன்ற புலியை சுட்டுக்கொல்ல அதிரடிப்படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும், இதில் 5 குழுக்களாக பிரிந்து புலியை சுடுவதற்கு திட்டம்மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு புலி ஒன்று அப்பகுதியில் பெண் ஒருவரை அடித்துக் கொன்றது. அங்கிருந்து கூடலுக்கு நகர்ந்த பின்னர் தேவன் எஸ்டேட் பகுதியில் குஞ்சு கிருஷ்ணஜ், சந்திரன் ஆகிய இரண்டு பேரையும் கொன்றது. இது மட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது.
இதனால் இந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அப்பகுதி மக்கள் பல்வேறு முறை போராட்டங்களை நடத்தினர். மேலும் அப்பகுதியில் வெளியில் நடமாடுவதற்கும் மக்கள் அச்சப்பட்டு இருந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். அதற்காக கால்நடை மருத்துவ குழு மற்றும் வனத்துறையினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒரு வாரமாக ஆட்கொல்லி புலி வனத்துறையினருக்கு கண்களில் படாமல் மறைந்து ஆட்டம் காண்பித்து வந்தது.
இந்நிலையில், நேற்று இந்த ஆட்கொல்லி புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் கால்நடை மேய்துக்கொண்டிருந்த மங்கள பசுவன் என்பவரை அடித்து கொன்றது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் புலியை சுட்டுப்பிடிக்க வேண்டும் என்று மசினகுடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு ஆணையை பொதுமக்களிடம் காண்பித்த பின்னரே கலைந்து சென்றனர்.
இதனையடுத்து மசினகுடி பகுதியில் பொதுமக்களை வேட்டையாடி வரும் புலியை சுட்டுப்பிடிக்க பிரத்யேக பயிற்சி பெற்ற நவீன ரக துப்பாக்கிகளுடன் அதிரடிப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இதனால் எப்போது வேண்டுமானாலும் புலியை வனத்துறையினர் சுடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வனவிலங்குளை வனத்துறையினயே சுடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வனவிலங்குளை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி அடித்தால் பொதுமக்களை அச்சுறுத்த வாய்ப்பு இருக்காது என்பது ஒரு சிலரின் கருத்தாக உள்ளது.
தற்போது புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்ட சம்பவம், வனவிலங்கு ஆர்வலர்களிடையே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவர் கூட புலியை சுட வேண்டாம் என்று கூறாமல் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: News 18 Tamil