Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறதா? வனபத்ரகாளி கோவிலின் வருமானத்துக்கு குறி வைக்கும் ஆ.ராசா!

வனபத்ரகாளி கோவிலின் வருமானத்துக்கு குறி வைக்கும் ஆ.ராசா!

கோவில் மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறதா? வனபத்ரகாளி கோவிலின் வருமானத்துக்கு குறி வைக்கும் ஆ.ராசா!

MuruganandhamBy : Muruganandham

  |  24 Oct 2021 3:50 AM GMT

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மூன்று முறை போட்டியிட்டு, இரண்டு முறை வெற்றி பெற்றவர் ஆ.ராசா. நீலகிரி தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான எம்.பி ஆ.ராசா கோவில் வருமானத்தை எடுத்துக்கொள்ளச் சொல்லி உத்தரவு போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி, கோவில் நிலத்தில் கல்லூரி அமைக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்,

எனது நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஒன்றியத்தின் மேற்குப்பகுதி தாழ்த்தப்பட்டோர் மற்றம் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இவர்களின் குழந்தைகள் உயர் மற்றும் தொழிற்கல்வி பெற வழியின்றி உள்ளனர்.

எனவே அவர்கள் பயன்பெறும் வகையில் தேக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அரசினர் பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி (Government Polytechnic College) அமைத்திட ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இக்கல்லூரி அமைப்பதற்கான நிதி வசதியை அருகாமையில் அமைந்துள்ள வன பத்திரகாளி அம்மன் திருக்கோயில் வருமானத்தில் இருந்து பெறலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

கோவில்களை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையை வைத்து, கோவில்களை பொதுத்துறை நிறுவனங்கள் போல செயல்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. எந்த இடத்திலும் தேவாலயம், மசூதிகளின் வருமானம் அரசின் கட்டுப்பாட்டில் வருவதில்லை. அவரவர் சமய உரிமை பறிபோவதில்லை. ஆனால் கோவில்களை மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து, அதன் வருமானத்தை பொது செலவினங்களுக்கு பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.










Next Story
கதிர் தொகுப்பு
Trending News