நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பயணம் செய்த அதிகாரிகளின் விவரம்!
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையிலான உயர் அதிகாரிகள் மற்றும் பைலட் உள்ளிட்ட 14 பேர் கோவை சூலூர் விமானப்படை, விமான தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்கடன் ராணுவ கல்லூரிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றுள்ளனர்.
By : Thangavelu

பணிமூட்டம் காரணமாக குன்னூர் அருகாமையில் வனத்துறைக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் உடனடியாக அணைக்க முடியவில்லை.
ராணுவ ஹெலிகாப்டரில் இருந்தவர்களை ராணுவ வீரர்கள் மீட்டு வருகின்றனர். இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. அதிலும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்டோரும் இருந்துள்ளனர். இதனிடையே ராணுவ ஹெலிகாப்டரில் டெல்லியில் இருந்து வந்தவர்களின் 1.பிபின் ராவத், 2.மதுலிகா ராவத், 3.எல்.எஸ்.லிடர், 4.ஹர்ஜிந்தர் சிங், 5.ஜிதேந்திர குமார், 6.விவேக் குமார், 7.சாய் தேஜா, 8.ஹாவ் சாட்பால், 9.குருசேவாக் சிங் உள்ளிட்டோரின் விவரங்கள் வெளியாகியுள்ளது. மீதம் 5 பேர் கோவை சூலூர் விமானப்படை விமானதளத்தில் இருந்தவர்கள் என கூறப்படுகிறது.
Source,Image Courtesy: Twiter