அடுத்த மதுரை ஆதீனம் நான்தான் ? நித்தியானந்தா அறிக்கையால் ஆதீனம் அறை சீல் வைப்பு !
சுவாசக் கோளாறு காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதம் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்த மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதி நான் தான் என குறிப்பிட்டு நித்தியானந்தா பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
By : Thangavelu
சுவாசக் கோளாறு காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதம் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்த மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதி நான் தான் என குறிப்பிட்டு நித்தியானந்தா பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆதீன மடத்திற்கான அனைத்து பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்கள் மற்றும் ஆன்மீக ரீதியான, மத ரீதியான சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் பெற்று உள்ளதாகவும் நித்தியானந்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுரை ஆதீனத்தின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக தருமபுர ஆதீனம் வந்திருந்தார். இதனையடுத்து ஆதீன அறையை பூட்டி சீல் வைத்தார். அப்போது பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ள அறை தருமபுர ஆதீனம் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி தருமபுர ஆதீனத்திற்கு தொடர்புடைய நபர்கள் மதுரை ஆதீன மடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் நித்தியானந்தா நான் தான் அடுத்த மதுரை ஆதீனம் என அறிக்கை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: Polimer
Image Courtesy: Dinamani, Dailythanthi
https://www.polimernews.com/dnews/152847/அடுத்த-மதுரை-ஆதீனம்-யார்?சர்ச்சையை-கிளப்பும்நித்தி..!