இரவு 8 மணியில் இருந்து உக்கிரமாகும் "நிவர்" புயல்.!
இரவு 8 மணியில் இருந்து உக்கிரமாகும் "நிவர்" புயல்.!
By : Mohan Raj
"நிவர்" புயல் தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளும், மக்களுக்கான அறிவிப்புகளும்.
"மக்கள் அனைவரும் இன்று இரவு வரை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; புயல் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் இன்று ஒருவர் இறந்துள்ள செய்தி வேதனை அளிக்கிறது!
இப்போதே புயலின் தாக்கம் தெரிகிறது. ஆங்காங்கே புயல் காற்று வீசுகிறது. 8 மணியிலிருந்து தாக்கம் அதிகமாக இருக்கும்" என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புயலின் காரணமாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்று வீசும்நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் மெழுகுவர்த்தி, டார்ச்லைட்டுகள், உணவுப் பொருட்களை பொதுமக்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி அறிவித்துள்ளார்.