Kathir News
Begin typing your search above and press return to search.

யாருக்கும் குறையில்லை! தமிழகத்தில் 1.08 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1267 கோடி வங்கி கடனுதவி!

யாருக்கும் குறையில்லை! தமிழகத்தில் 1.08 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1267 கோடி வங்கி கடனுதவி!

யாருக்கும் குறையில்லை! தமிழகத்தில் 1.08 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1267 கோடி வங்கி கடனுதவி!

Muruganandham MBy : Muruganandham M

  |  18 Dec 2020 6:00 PM GMT

கொரோனா காலத்தில் மாநிலம் முழுவதும் 1.08 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1267 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகம் சிறப்பாக எதிர்கொண்டு இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக உள்ளது.

நோயை முற்றிலும் தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று. ஆனால் நோய் ஏற்படும்போது அந்த நோயை போக்க மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்து நோயற்ற நல்வாழ்வை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதலமைச்சர் அரசின் சார்பாக பல்வேறு விதமான நலத்திட்டங்களையும், சிறப்பு நிதியுதவிகளையும் வழங்கினார்.

குறிப்பாக கொரோனா காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பு கடனுதவியை அம்மாவின் அரசு வழங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாநிலம் முழுவதும் 1,07,933 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1,266.66 கோடி சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று, புயல் மற்றும் மழை போன்ற பல்வேறு இயற்கை இடற்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலும் முதலமைச்சர் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் எவ்வித தொய்வுமின்றி பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

எனவே, உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர் அனைவரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதிலும், பொது மக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதிலும் விரைந்து பணியாற்றிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News