கோவையில் இரவு முழுவதும் காத்திருந்தும் தடுப்பூசி இல்லை: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொது மக்கள்.!
கோவையில், கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நேற்று இரவு முதலே மிக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு, டோக்கன்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By : Thangavelu

கோவை, பீளமேடு, வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தடுப்பூசி முகாம்களில் நேற்று இரவு முதல் ஏராளமானோர் காத்திருந்தனர். ஆனால் வடமதுரை அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட முகாம் முன் காத்திருந்த பொதுமக்கள் டோக்கன்கள் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி அங்கிருந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுடன் முற்றுகையிட்டனர்.
அதே போன்று பீளமேடு மாநகராட்சி பள்ளியில் நெடு நேரம் காத்திருந்தவர்கள் டோக்கன் கொடுக்காத காரணத்தினால் சாலை மறியலில் ஈடுபட்டனர். திமுக ஆட்சி அமைந்த பின்னர் கோவை மாவட்டத்தில் சரிவர தடுப்பூசி கிடைப்பதில்லை என பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் மற்றும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.