ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம்: களத்தில் இறங்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ., காந்தி.!
நாகர்கோவில் அருகே ரேஷன் கடையில் மிகவும் தரமற்ற முறையில் அரிசி வினியோகம் செய்யப்பட்டதை அறிந்து சம்பவ இடத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட பாஜக எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி.

By : Thangavelu
நாகர்கோவில் அருகே ரேஷன் கடையில் மிகவும் தரமற்ற முறையில் அரிசி வினியோகம் செய்யப்பட்டதை அறிந்து சம்பவ இடத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட பாஜக எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் என்ற பகுதியில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் தரமற்ற முறையில் அரிசி விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. இது குறத்து மாவட்ட ஆட்சியரிடம் நாகர்கோவில் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ., காந்தி புகார் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் நேற்று ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி மிகவும் மோசமானதாக இருப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்.எல்.ஏ., காந்தி கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதுடன், உயர் அதிகாரிகளிடம் பேசி நல்ல அரிசியை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
