Kathir News
Begin typing your search above and press return to search.

வடகிழக்கு பருவமழை தீவிரம்.. டெல்டா மாவட்டங்களில் கனமழை..!

வடகிழக்கு பருவமழை தீவிரம்.. டெல்டா மாவட்டங்களில் கனமழை..!

வடகிழக்கு பருவமழை தீவிரம்.. டெல்டா மாவட்டங்களில் கனமழை..!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2020 8:15 AM GMT

வடகிழக்குப் பருவமழை தீவிரிமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.

தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், அருவியில் இருந்து பெருகி ஓடும் வெள்ளம் குற்றாலநாதர் கோவிலின் முன்புறமும் பெருகி ஓடுகிறது.

பொதுமக்கள் செல்லாதவாறு போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் ஊரணியில் உடைப்பு ஏற்பட்டதால் பெருகிய காட்டாற்று வெள்ளத்தில் 2 பெண்கள் சிக்கிக் கொண்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.

டெல்டா மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், பொறையார், தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

நாகை, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரியிலும் மழை நேற்று முதல் விட்டு விட்டு பெய்து வருகிறது. சில நேரங்களில் வெயில் அடிக்கிறது. சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலை ஏற்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News