கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களுக்கு மூக்குடைப்பு.. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு விவகாரம்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களுக்கு மூக்குடைப்பு.. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு விவகாரம்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணைக்கு ஏற்ப தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதற்கு கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் முட்டுக்கட்டை போடுவதற்காக இந்த விவகாரத்தை நீதிமன்றம் வரையில் எடுத்துச்சென்றது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டால் தங்களுக்கான உரிமைகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு ஏற்கனவே கலந்தாய்வு முடிந்து விட்டதாகவும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
மேலும், ஒதுக்கீட்டிற்கு எதிராக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என்றும் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று கூறினர். மேலும், இந்த வழக்கு பற்றி தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை வெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் முயல்வது சரியில்லை. எனவே இது போன்ற கல்வி நிறுவனங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்பது அனைத்து ஏழை மாணவர்களின் கருத்தாக உள்ளது.