Begin typing your search above and press return to search.
மின்சார ரயில்களில் நாளை முதல் பயணிகளுக்கு அனுமதி இல்லை.!
தெற்கு ரயில்வே முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாக இருப்பதால் புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

By : Thangavelu
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிழப்புகள் 300க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மே 6ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாக இருப்பதால் புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
அத்தியாவசிய பணிகளுக்காகச் செல்பவர்கள், மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Next Story
