Kathir News
Begin typing your search above and press return to search.

“செம்பரம்பாக்கத்தால் உங்களுக்கு எதுவும் ஆகாது.. கேரண்டி கொடுக்கும் அமைச்சர்.!

“செம்பரம்பாக்கத்தால் உங்களுக்கு எதுவும் ஆகாது.. கேரண்டி கொடுக்கும் அமைச்சர்.!

“செம்பரம்பாக்கத்தால் உங்களுக்கு எதுவும் ஆகாது.. கேரண்டி கொடுக்கும் அமைச்சர்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2020 5:00 PM GMT

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதால் சென்னை மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின், அரசு செயலாளர்கள், சென்னை ஆணையர் பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி: 12 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் போது பெய்யும் இயல்பான மழையே பெய்து வருகிறது.

கனமழை பெய்தாலும், நீர் வடிவதற்கான வடிகால் கட்டுமானம் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. கிருஷ்ணா நதியின் நீர் வரத்தால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயருகிறது. அதனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. சென்னை மக்களுக்கு 100% எந்த பாதிப்பும் வராது என கூறியுள்ளார்.

மேலும், மருத்துவ கழிவுகளை முறையாக வெளியற்றாத மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News