கொரோனா தொற்று எதிரொலி கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு !
கொரோனா வைரஸ் தொற்று கேரளாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் கோவை மாவட்டம் அருகாமையில் உள்ளதால் அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
By : Thangavelu

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் நகராட்சிகளில் வார நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் துணி, மால், நகைக்கடைகள் மற்றும் பூங்காக்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் இரவு 10 மணிக்குள் அடைத்துவிட வேண்டும். ஓட்டல்கள் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை 50 சதவீத பேருடன் இயங்கலாம். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: Maalaimalar
Image Courtesy:India Tv news
https://www.maalaimalar.com/news/topnews/2021/08/31050355/2973573/Tamil-News-Notice-of-additional-restrictions-in-Coimbatore.vpf