Kathir News
Begin typing your search above and press return to search.

நடந்தது என்ன? திருவண்ணாமலையில் விவசாய கிணற்றிலிருந்து கன்னியாஸ்திரி சடலமாக மீட்பு!

nun-dies-after-falling-into-farm-well-in-kallakkurich

நடந்தது என்ன? திருவண்ணாமலையில் விவசாய கிணற்றிலிருந்து கன்னியாஸ்திரி சடலமாக மீட்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Feb 2022 4:11 PM GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி கௌசல்யா. இவருக்கு 24 வயதாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கி கன்னியாஸ்திரி பயிற்சி முடித்துள்ளார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பிய அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை எறையூர் புனித சார்லஸ் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று கல்லூரி வகுப்பு முடிவடைந்த பின்னர் கன்னியாஸ்திரி பெண்கள் தங்கும் விடுதிக்கு வந்துள்ளார். விடுதிக்கு அருகே உள்ள விவசாய தோட்டதில் மஞ்சள் விதைக்கப்பட்டிருந்தது. அவை அறுவடை செய்யப்படுவதை பார்வையிட சென்றுள்ளார். அங்கு சிறுவர்களுடன் விளையாடிவிட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பும்போது எதிர்பாராத விதமாக விவசாயக் கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அவரது உடலை தேடும் முயற்சி நடந்து வந்தது. சுமார் நூறு அடி இருக்கும் ஆழமான கிணற்றில் முழுமையாக நீர் நிரம்பி இருந்ததால் மீட்பு முயற்சியில் தாமதம் ஏற்பட்டது. இரவு நெருங்கிய பின்னர் மேல் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் உடலை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

பிறகு தொடர்ந்து பெரிய குழாய் மற்றும் மோட்டர்களை பொருத்தி கிணற்று நீரை வெளியேற்றும் பணி நடந்தது. நேற்று காலை கன்னியாஸ்திரி கௌசல்யா உடல் கைபற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News