ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? அதிகாரிகள் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அதே போன்று கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
By : Thangavelu

இந்நிலையில், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து பாடம் நடத்தாவிட்டால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஐ.சி.எம்.ஆர். மற்றும் உலக சுகாதார நிறுவனமும் தொடக்க பள்ளிகளை துவங்குவதற்கான வழிகாட்டு முறைகளை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், பள்ளிகளை திறப்பது பற்றி மருத்துவத்துறை, பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மற்றும் நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
பெற்றோர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம் என்ற நிபந்தனையுடன், தனியார் மற்றும் அரசு பள்ளிகளை திறக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்க உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.
Source, Image Courtesy: Daily Thanthi