Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியை வாரி சுருட்டும் அதிகாரிகள் - தி.மு.க அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு தொடர்பாக நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியை வாரி சுருட்டும் அதிகாரிகள் - தி.மு.க அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

Mohan RajBy : Mohan Raj

  |  5 Dec 2022 2:24 PM GMT

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு தொடர்பாக நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த திட்டத்தை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்தியாவில் அனைவருக்கும் வீடு என்ற உன்னத நோக்கத்துடன் பிரதமர் மோடி கடந்த 2015 ஆம் ஆண்டு 'ஆவாஸ் யோஜனா' என்ற திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட பணம் வழங்கப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

2024 ஆம் ஆண்டிற்கு மேலும் 1.72 கோடிகள் வீடு கட்டப்படும் என மத்திய அரசின் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சமீப காலமாக இந்த திட்டத்தை பயன்படுத்தி பலரும் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் வீடுகள் கட்டாமலே கட்டப்பட்டு இருப்பதாக கூறி அதிகாரிகள் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அரியலூரில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஷேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அதில், 'அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீடு வசதி திட்டத்தின் கீழ் ஒரே பயனாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. ஓய்வு ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதியில் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் முறைகேடு செய்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக்கோரி இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது இதன் நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் பிறப்பிக்க தேவையில்லை என கூறினார்.

அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், 'பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் தகுதியற்றவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தல், தேசிய வேலை உறுதி திட்ட நிதியில் கையாளர்கள் நடப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன இதை தீவிரமாக கருத வேண்டும். எனவே இந்த வழக்கில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகிறார். இதுபோன்ற விதி மீறல்களில் ஈடுபட்டு தகுதியற்ற நபர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவுகளை வழங்க வேண்டும், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் வீடு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் உண்மை தன்மை குறைந்து சரிபார்க்கவும் வேலை உறுதித் திட்ட நிதி பயன்பாடு குறித்து ஆய்வு செய்யவும் வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்துக்கு இணையான அதிகாரியை நியமிக்க வேண்டும்.

சட்டவிரோதமாக வீடுகளை ஒதுக்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனக்கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசின் திட்டத்தில் தி.மு.க ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News