Kathir News
Begin typing your search above and press return to search.

விதிமுறைகள் என்ற பெயரில் முதியோர் உதவித் தொகையில் வேலையை காட்டிய தி.மு.க அரசு - அட இதுவும் போச்சா என தலையில் அடித்துக்கொள்ளும் மக்கள்!

முதியோர் உதவித் தொகையில் முறைகேடு நடந்ததாக சுமார் 4180 பைனாளர்கள் காஞ்சிபுரத்தில் தகுதி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள்.

விதிமுறைகள் என்ற பெயரில் முதியோர் உதவித் தொகையில் வேலையை காட்டிய தி.மு.க அரசு - அட இதுவும் போச்சா என தலையில் அடித்துக்கொள்ளும் மக்கள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 Dec 2022 2:11 AM GMT

அரசு சார்பில் முதியோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை பெறுவதில் பல்வேறு முறை கேடுகள் நடந்திருப்பதாகவும், மேலும் தகுதியான நபர்களை தவிர்த்து தகுதியற்ற நபர்களுக்கும் இந்த பயன் சென்றடைவதாகவும் குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் நடத்த அதிரடி ஆய்வில் 4,180 பேர் முறைகேடு ஏற்பட்டுள்ளது அம்பலமாக இருக்கிறது.

அதனை தொடர்ந்து அத்தகைய பயனாளிகள் தகுதி பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசு தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளின் பட்டியலில் முதியோர் உதவித் தொகையும் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் உறவினர்கள் உட்பட எவரும் ஆதரவு இன்றி தனித்து வாழும் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் இத்திட்டத்தின் கீழ் பயன்படலாம். அவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.


இவ்வகை பயனாளிகளுக்கு உறவினர்கள் ஆதரவு மட்டும் அல்ல, சொந்த வீடு, இரண்டு சமையல் கேஸ் சிலிண்டர்கள் இணைப்பு, வங்கியில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பு, ஐந்து சவரனுக்கு மேல் நகை இருக்கக் கூடாது என பல்வேறு விதிமுறைகள் உள்ளன கீழ்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் உதவி தொகைகளை பெற விண்ணப்பிக்க வேண்டும்.


ஆனால் இதன் உண்மை தன்மை குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு செய்ய பிறகு இந்த விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிப்பார்கள். அந்த வகையில் முழுவதும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான முறைகேடு நடைபெற்றுவதாக புகார் எழுந்திருக்கிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதியோர் உதவி தொகை பெரும் பயனாளிகள் குறித்து அரசு அலுவலர்கள் ஆய்வு செய்தார்கள்.


அப்போது 60 ஆயிரத்து 500 பேர் முதியோர் உதவி தொகை பெறுகிறார்கள். அவர்களை சில ஆடம்பர வசதியுடன் வாழ்வதாகவும் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து முறைகேடாக உதவி தொகை பெறுவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,180 பேர் தவறான வழியில் உதவி தொகை பெற்று இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy:



Next Story
கதிர் தொகுப்பு
Trending News