Begin typing your search above and press return to search.
ஜூலை 1ம் தேதி முதல் ஆம்னி பேருந்து சேவை தொடக்கம்.!
கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் 27 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை தொடங்கியது.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் 27 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை தொடங்கியது.
அதே போன்று தனியார் மற்றும் ஆம்னி பேருந்து சேவைகள் தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து சேவை ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரம் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக ஆம்னி பேருந்துகள் கடந்த 2 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து பேருந்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது.
Next Story