‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ திட்டம்: ஆளுநர் பெருமிதம்.!
‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ திட்டம்: ஆளுநர் பெருமிதம்.!

By : Kathir Webdesk
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுவதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம் அடைந்துள்ளார்.

இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் இன்று 11 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த உரையில் தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளதாக கூறினார். மேலும், கொரோனா பேரிடர் காலத்தில் அனைவருக்கு உணவு கிடைப்பதற்கு தமிழக அரசு வழிவகை செய்துள்ளது மிகவும் சிறப்பு மிக்கவை எனக்கூறினார்.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வெளிமாநில தொழிலாளர்களுக்கு இலவசமாக மத்திய அரசு வழங்கும் உணவுப்பொருள் தங்குத்தடையின்றி கிடைக்க இந்த திட்டம் உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
