ஒரு வாரம் மிக கடுமையான முழு ஊரடங்கு: தமிழக அரசு போட்ட புதிய உத்தரவு.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2 அல்லது மூன்றாவது இடத்தை பிடித்து வருகிறது.

By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2 அல்லது மூன்றாவது இடத்தை பிடித்து வருகிறது. தினசரி பாதிப்பாக 35 ஆயிரத்தை கடந்து செல்கிறது. கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு உயர்ந்து வருவது மருத்துவர்கள் மட்டுமின்றி அரசுகளிடையேயும் மிகப்பெரிய பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
தினந்தோறும் தொற்று எண்ணிக்கையால் மருத்துவமனையில் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் நிலையும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அனைத்து தரப்பினரும் ஊரடங்கை கடுமையாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து மே 24ம் தேதிக்கு பிறகு ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். முழு ஊரடங்கின்போது மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்கலாம். பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
