ஒரு வருடம் கழித்து முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு.!
ஒரு வருடம் கழித்து முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு.!
By : Kathir Webdesk
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த ஒரு வருடத்திற்கு பின்னர் மூவர் குழுவினர் ஆய்வு செய்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வருடம் தோறும் அணையை பார்வையிட்டு பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யும். அதே போன்று 5 பேர் கொண்ட துணைக் குழுவும் 3 மாதத்திற்கு ஒருமுறை அணையின் நீர்மட்டம், இருப்பு உள்ளிட்டவை பற்றி ஆய்வு மேற்கொள்ளும்.
இந்நிலையில், நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில், இன்று 14 வது முறையாக ஆய்வு செய்தனர். அணை மற்றும் நீர் இருப்பு உள்ளிட்டவைகள் ஆய்வு செய்த பின்னர் கேரள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அந்த ஆலோசனையில் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் வகையில், பேபி அணையை பலப்படுத்தவும், மேல் தேக்கடி ஏரியில் படகை இயக்க அனுமதி வழங்க வேண்டுமென்று தமிழக அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.