Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர் தற்கொலைகளுக்கு அடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை!

தமிழகத்தில் தொடர் தற்கொலைகளுக்கு அடுத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை.

தொடர் தற்கொலைகளுக்கு அடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Oct 2022 11:47 AM GMT

தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை அமலுக்கு வந்தது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சிலர் உடைமைகளையும், உயிர்களையும் பலி கொடுக்கும் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை இருந்து வந்தது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான வலுவான சட்டத்தை உருவாக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து புதிய சட்டம் ஏற்றுவது தொடர்பாக அரசு அறிக்கை பெற்றது.


அதன்படி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும், தடை செய்வதற்குமான அவசர சட்டத்தை இயற்றி கடந்த செப்டம்பர் மாதம் 20 26ஆம் தேதி கூடிய அமைச்சரவை முன்பு கொண்டுவரப்பட்டது. அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் ஒன்றாம் தேதி கவர்னர் அலுவலகத்திற்கு அரசு இதை அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அவசர சடை தடைச் சட்டத்தை கவர்னர் ரவி அன்றைய தினமே பரிசளித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசாணை அனுப்பி வைத்தார்.


அதனை தொடர்ந்து மூன்றாம் தேதி அதன்படி ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுக்கான தடை அந்த அவசரச் சட்டத்தின் மூலம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக அந்த அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில அம்சங்கள்: அந்த ஆன்லைன் விளையாட்டு விளையாடுபவரை பண ஆசை காட்டி அடிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டிருப்பதை, அதன் மூலம் உடல் நலக்கு மட்டுமல்லாமல், பொருளாதார சுரண்டலுக்கும் வழிவகுக்கிறது என்றும் அதனால் சமூகப் பொருளாதாரத்திற்கு கேடு விளைவிக்கிறது என்றும் கூறியிருக்கிறது. எனவே தமிழகத்தில் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள இந்த தடைச் சட்டத்தின் பெயர் "தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை அவசரச் சட்டம் 2022" என்பதாகும். உடனடியாக இது அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News