Kathir News
Begin typing your search above and press return to search.

ஊட்டி மலை ரயில்.. புதிய வசதிகளுடன் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம்.!

மேட்டுப்பாளையத்தில் கூடுதல் வசதிகள் அடங்கிய புதிய ரயில் பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ஊட்டி மலை ரயில்.. புதிய வசதிகளுடன் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 April 2021 10:09 AM IST

கோவை மாவட்டம், மேட்டூப்பாளையத்தில் கூடுதல் வசதிகள் கொண்ட புதிய ரயில் பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்குது ஊட்டி. அங்கு கோடை காலம் வந்துவிட்டால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் மலை ரயில் புதுபொழிவுடன் தயாராகி வருகிறது.

கோவை, மேட்டுப்பாளையத்தில் கூடுதல் வசதிகள் அடங்கிய புதிய ரயில் பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான இந்த சோதனை ஓட்டத்தில் புதிய பெட்டிகளின் சக்கரங்கள் செங்குத்தான மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பல்சக்கர இருப்பு பாதையில் சரிவர பொருந்துகிறதா என சோதனை செய்யப்படும் என்று விரைவில் இவை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.





இந்த புதிய ரயில் பெட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு என்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மலைகளை ரசித்து செல்வதற்காக பெரிய கண்ணாடி ஜன்னல்கள், குஷன் இருக்கைகள், குகைக்குள் ரயில் செல்லும்போத தானாகவே மின் விளக்குள் எரியும். மேலும், பாடல் கேட்பதற்கு ஸ்பீக்கர் வசதி செய்யப்பட்டுள்ளது. செல்போன்களுக்கு சார்ஜ் போடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் மகிழ்ச்சியை தரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News