Begin typing your search above and press return to search.
சம்பளம் வழங்காததால் ஊட்டியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. தேங்கிய குப்பைகளால் பொதுமக்கள் அதிர்ச்சி.!
இதுநாள் வரையிலும் சம்பளம் வழங்கப்படாததால் நகர்புறத்தில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் தங்களது பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக குப்பைகள் மலைபோன்று குவிந்துள்ளது. நகர்புறங்களில் தேங்கியுள்ள குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.

By : Thangavelu
ஊட்டியில் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த ஜூன் மாதம் சம்பளம் இதுவரை வழங்கவில்லை. இதன் காரணமாக 300க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இதுநாள் வரையிலும் சம்பளம் வழங்கப்படாததால் நகர்புறத்தில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் தங்களது பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக குப்பைகள் மலைபோன்று குவிந்துள்ளது. நகர்புறங்களில் தேங்கியுள்ள குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.
நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தை வழங்கி, நகரத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Next Story