சுற்றுலா பயணிகளுக்கு தடை: ஊட்டியில் வணிகர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் போராட்டம்.!
நீலகிரி, மற்றும் கொடைக்கானல் உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அரசு தடை விதித்தது.

By : Thangavelu
நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கு தமிழக அரசு தடை விதித்ததை கண்டித்து, வணிகர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் சுற்றுலா தளம் மற்றும் கோயில்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. அது மட்டுமின்றி இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அரசு தடை விதித்தது. சுற்றுலாப் பயணிகளை நம்பி நீலகிரி பல ஆயிரம் கணக்கான வணிகர்கள் உள்ளனர். தற்போது தமிழக அரசு விதித்த தடையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டியில் வணிகர்கள், சிறுவியாபாரிகள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் என்பது சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளது. தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
