செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறப்பு! பணியாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
By : Thangavelu
செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் அடுத்த மாதம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்கள் விரல் நகங்களில் நகப்பூச்சு, செயற்கை நகங்கள் ஏதும் பயன்படுத்தக்கூடாது
மூக்கு சரிதல், தலை கோதுதல், கண்கள், காது, வாயை தேய்த்தல், எச்சில் துப்புவது தவிர்க்க அறிவுரை
அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்
அங்கன்வாடி மையம் வரும் இரண்டு முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை
காலாவதியான தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது என வழிகாட்டு நெறிமுறை வெளியீடு அங்கன்வாடி பணியாளர்கள் அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு 40 நொடிகள் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்
காலாவதியான தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது என வழிகாட்டு நெறிமுறை வெளியீடு எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை உண்ணுவதற்கு தகுதியுடைய அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு பதிலாக உலர் உணவுப் பொருட்களோ அல்லது அதற்கு ஈடாக உணவு பாதுகாப்பு தொகையோ வழங்கப்படமாட்டாது.
காலாவதியான தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது என வழிகாட்டு நெறிமுறை வெளியீடு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அங்கன்வாடி மையத்திற்கு வருவதை தவிர்த்து உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: TN GOVT
Image Courtesy:Topnews