Kathir News
Begin typing your search above and press return to search.

நாடு முழுவதும் எதிர்கட்சிகளின் 'பந்த்' பிசுபிசுப்பு: பொய் பேசிய எதிக்கட்சிகள் முகத்தில் கரியை பூசிய விவசாயிகள்.!

நாடு முழுவதும் எதிர்கட்சிகளின் 'பந்த்' பிசுபிசுப்பு: பொய் பேசிய எதிக்கட்சிகள் முகத்தில் கரியை பூசிய விவசாயிகள்.!

நாடு முழுவதும் எதிர்கட்சிகளின் பந்த் பிசுபிசுப்பு: பொய் பேசிய எதிக்கட்சிகள் முகத்தில் கரியை பூசிய விவசாயிகள்.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  9 Dec 2020 1:34 PM GMT

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக கூட்டணி தமிழ்நாட்டில் நடத்திய போராட்டங்கள் அரசியல் கட்சி போராட்டங்களாகவே நடைபெற்றது. இந்தியா முழுவதும் 3 மாநிலங்களைதவிர எந்த மாநிலங்களிலும் பந்துக்கு விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், நாடு முழுவதும் பந்த் பிசுபிசுத்தது என்றும் செய்திகள் வந்துள்ளன.

இந்த போராட்டங்களில் கட்சி சார்ந்த விவசாய அமைப்புகள் மட்டுமே பங்கேற்றன. மற்றபடி விவசாயிகள் சார்பிலான விவசாய சங்கங்கள் எதுவும் பங்கேற்கவில்லை. இந்த சட்டங்களால் பாதிப்பு எதுவும் இல்லை என்ற மனநிலையில், தமிழ்நாட்டு விவசாயிகள் இருப்பதால், அவர்களிடம் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவில்லை என கூறப்படுகிறது..

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்களால் அங்குள்ள சிலருக்கு பாதிப்பு இருக்கலாம். என்றாலும் அங்கு எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்பதாலும், மிக பழமையான மண்டிகள் ஆதரவை முன் வைத்தும் போராட்டம் பெரிதாக உள்ளது.

ஆனால், தமிழ்நாடு உட்பட ஏராளமான மாநிலங்களில் இப்போது விவசாயமும் தொழிற்துறையும் கைகோர்த்து செல்வது பெருமளவு பொருளாதார வளர்ச்சியைத்தான் தரும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

விவசாய விளைபொருள் சந்தையில் தற்போது நவீன வசதிகள் இல்லாத பழைய அமைப்புகளையும், காலாவதியான முறைகளையும் பின்பற்றும் வியாபாரிகளே முழுமையாகக் கட்டுப்படுத்துகின்றனர். விற்பனை சந்தையில் போட்டி இல்லாததால் இந்த நிலை நீடிக்கிறது. போட்டி வரும்போது விவசாயிகளின் பேர வலிமை அதிகரிக்கும் என்பதே உண்மையாகும்.

இதை தமிழகத்தில் உள்ள புதிய தலைமுறை விவசாயிகள் புரிந்து கொண்டுள்ளனர். ஏனெனில் பழைய சந்தை முறைகளையும் மத்திய அரசு நீக்கிவிடவில்லை, புதிய கூடுதல் சந்தை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

அதனால்தான் தமிழகத்தில் திமுக கூறுவதை விவசாயிகள் ஏற்காமல் பந்த் -ஐ புறக்கணித்து விட்டனர். பல இடங்களில் கடைகள் மூடப்பட்டிருக்கலாம், சாலைகள் வெறிச்சோடி கிடக்கலாம் ஆனால் அதற்கும் விவசாயிகளுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர்.

வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகரித்து மேலும் விலை உயரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், அவரது கூட்டணிக் கட்சிகளும் கூறியிருப்பது தவறானது என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.ஏனெனில் புதிய வேளாண் சட்டங்களால், சேமிக்கும் கட்டமைப்புகள் உள்ள கார்பரேட் நிறுவனங்கள் காலடி வைக்கும்போது, விலைவாசியில் சீரற்ற ஏற்ற இறக்கங்கள் இருக்காது. சில்லறை பணவீக்கத்தையும் ஒரே சீராக வைக்கவும் அரசு கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

மேலும், விவசாய விளைபொருட்களைத் தற்போது விவசாயிகள் உள்நாட்டில் தங்களுக்கு அருகில் இருக்கும் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். உள்நாட்டில் ஒரு குறிப்பிட்ட விளைபொருளுக்குத் தேவை குறையும்போது, அதற்கான விலையும் குறைகிறது. ஆனால் கார்பரேட் கம்பெனிகள் வர்த்தகத்தில் நுழையும்போது, உழவர்கள் இருக்கும் நிலை இன்னும் மாறும்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க விவசாயிகள் எப்படி கார்பரேட் கம்பெனிகள் மூலமாக சர்வதேச சந்தையில் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்கிறார்களோ, அதுபோல் தமிழக விவசாயிகள் சர்வதேச சந்தையில் தங்கள் விளைபொருட்களை விற்கலாம். வாங்குவோர் இடையே போட்டியும், அதிக சந்தைகளும் இருப்பதால் விவசாய விளைபொருட்கள் அதிக விலைக்குப் போகும் வாய்ப்பே உள்ளது. இதை இப்போதுள்ள படித்த விவசாயிகள் நன்கு புரிந்து கொண்டு மற்ற விவசாயிகளுக்கு எடுத்து சொல்லி வருகிறார்கள்.

மேலும் விதைக்கும் முன்பே வர்த்தகர்களுடன் ஒப்பந்தம் போடப்படுவதால் விதை போடும்போதே விற்பனைக்கும், விலைக்கும் உத்தரவாதம் ஏற்படும் எனவும் விவசாயிகளுக்கு புரிய வைக்கப்படுகிறது.

மேலும், ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் விவசாயத்துறையில் வளர்ச்சி பெற்றுள்ளனர். அங்குள்ள விவசாயிகளும் வாழ்க்கை வசதிகளுடன் இருக்கின்றனர். கார்பரேட்டுகள் கால்வைக்கும் துறை நவீனமாகும், வளர்ச்சிபெறும் என்பதே உலக நாடுகளின் அனுபவமாகும்.

இதை தற்போதுள்ள இளைய தலைமுறை விவசாயிகள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். மேலும் நிலத்தை எக்காரணம் கொண்டும் விற்பனைக்கு கொண்டு செல்லக் கூடாத வகையில் புதிய சட்டங்கள் அமைந்துள்ளதால் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதனால்தான் பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலம், பீகாரை தவிர மாநில மாநில விவசாயிகள் புறக்கணித்துள்ளனர். தமிழ்நாட்டில் உண்மையில் திமுகவின் முகத்தில் விவசாயிகள் கரியை பூசியுள்ளனர் என்பதே உண்மையாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News