Kathir News
Begin typing your search above and press return to search.

அரியர் தேர்வு ரத்து செய்வதை ஏற்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

ஒரு உறுதியான தகவலை வெளியிட்டால் மட்டுமே மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.

அரியர் தேர்வு ரத்து செய்வதை ஏற்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

ThangaveluBy : Thangavelu

  |  7 April 2021 2:21 PM GMT

கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதிலும் அரியர் மாணவர்கள் தேர்வுக்கு பணம் செலுத்தியிருந்தால் அவர்களும் தேர்ச்சி என கூறப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவரும் பெரும் மூச்சி விட்டனர். இந்நிலையில், இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.





இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆனால் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார் பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு வழக்கறிஞர். இதனை தொடர்ந்து அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தியவர்களின் தேர்ச்சி உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.





இந்த வழக்கை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். அரசு மற்றும் நீதிபதிகள் உத்தரவால் மாணவர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகின்றனர். ஒரு உறுதியான தகவலை வெளியிட்டால் மட்டுமே மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். தேர்ச்சி பெற்ற நிலையில், மீண்டும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவார்களா என்பது ஏப்ரல் 15ம் தேதிக்கு பின்னரே தெரியவரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News